கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மைய கட்டுமானப் பணி தொடக்கம்

தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இன்று (09.03.2024) தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுமானப் பணியினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து, கட்டுமானப் பணியினை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



முன்னதாக, மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம்பாஷா, குணசேகரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சரண்யா, சபரிராஜ், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...