கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா - தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் இது குறித்து நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு இட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மனுதாரரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், மஹாசிவராத்திரி விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததால் மனுதாரரின் நோக்கம் கேள்விக்குரியதாக உள்ளது என்றும் கூறி வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...