கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் 224 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

அமைச்சர் கயல்விழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருவாய்த்துறையின் சார்பில் 224 பயனாளிகளுக்கு ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டாகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 224 பயனாளிகளுக்கு ரூ.4,89,08,160 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

இதில் பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதிகமாக பட்டாக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றால் 1500-க்கு மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். எனவே, அனைவரும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பெற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க உதவியாக இருக்கிறது. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு பட்டப்படிப்பு படிப்பதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு 35 சதவீதம் அரசு மானியமாகவும், 65 சதவீதம் முதலீடாவும் தொழில் தொடங்கலாம்.

மேலும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் கட்டாயம் தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டும். முதலமைச்சர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வீடு இல்லாதவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம். 2023-24 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த வருகிறார்கள். இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களில் 224 நபர்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

அந்த வகையில், இன்றைய தினம் 224 பயனாளிகளுக்கு ரூ.4,89,08,160/- மதிப்பீட்டில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...