கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவக்கம்

மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB, கேரட்டை உண்ணும் முயல் ஆகியவை பார்வையாளர்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விதமான மலர்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த மலர் கண்காட்சியில் பெரிய மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB, கேரட்டை உண்ணும் முயல் ஆகியவை பார்வையாளர்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.



மேலும் இந்த கண்காட்சியில் போன்சாய் செடிகள், வெளிநாட்டு செடிகள், மூலிகை செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் கண் கவர் மலர்கள், டென்னிஸ் ஆடுகளம், கிரிக்கெட் வீரர்களின் செல்பி ஸ்பாட், ஆகியவையும் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சியை பார்க்க வந்திருந்த அனைவரும் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த கண்காட்சியில் மலர் செடிகள் வளர்ப்பு மூலிகை செடிகள் வளர்ப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.



இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு நூறு ரூபாயும், குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் தற்காலிக உணவு விடுதிகளை அமைத்துள்ளன. மேலும் இலவச குடிநீர் வசதியும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை குடும்பங்களுடன் வந்து கண்டுக்களிக்க வேண்டும் எனவும், நாள்தோறும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இங்கு யோகா பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....