கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கோவில் விழாவில் கடவுள் வேடமணிந்து கலைஞர்கள் வள்ளிக்கும்மி ஆட்டம்

சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களின் வேடங்களில் வந்த நடன கலைஞர்கள் குழந்தைகளுடன் இணைந்து கும்மி பாடல்களுக்கு நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.


கோவை: கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரபலமான, பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலைகளான வள்ளி கும்மியாட்டம், பவள கும்மி, ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட தொன்மையான நடன கலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆடப்பட்டு வருகிறது.

இந்த நாட்டுப்புற கலைகளை கற்றுத் தேர்ந்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக சங்கமம் கலைக்குழுவின் ஆசிரியர் கனகராஜ், உதவி ஆசிரியர்கள் தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் வள்ளி கும்மி ஆட்டத்தை பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவசமாக கற்றுக்கொடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொண்ட கருமத்தம்பட்டி மாணவர்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று (பிப்.21) நடைபெற்ற அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு நடனமாடினர்.

இதில் 3 வயது சிறுவர், சிறுமியர் முதல் கல்லூரி மாணவிகள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஒரு சேர கும்மி பாடல்களுக்கு ஒரே மாதிரியான நடன அசைவுகளுடன் உற்சாகமாக நடனமாடினர்.

அரங்கேற்ற விழாவில் சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களின் வேடங்களில் வந்த நடன கலைஞர்கள் குழந்தைகளுடன் இணைந்து கும்மி பாடல்களுக்கு நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் மக்கள் வள்ளி கும்மி அரங்கேற்றத்தை கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...