மாநகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் வழங்கியது

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் துவங்கி வைத்தார். கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 146 குழந்தைகள் படித்து வருகின்றனர். 



இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முன்னதாகவே ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. 



அந்த நிகழ்ச்சியின் போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களிடம் கூறுகையில் எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இல்லை என்று தெரிவித்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் இத்திட்டத்தினை எடுத்து ரூபாய் 40 ஆயிரம் செலவில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார். அதேபோல் மெர்சி ஹோம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள், கழிவறை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம்.   



இதனை ஆர்க் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது கொடுத்தது. இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குருதீப் சிங், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால், ஆர்க் பவுண்டேஷன் நிறுவனர் அபர்ணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...