கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் 54 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.



இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 54 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.



இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 11 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 11 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 15 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் ஆகமொத்தம் 54 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையர் (கணக்கு) மாணிக்கம், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் கவிதா(கிழக்கு), சந்தியா(மேற்கு), ஸ்ரீதேவி(வடக்கு), பிரேம் ஆனந்த்(தெற்கு), செந்தில்குமரன்(மத்தியம்), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...