மங்கலக்கரை புதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி திமுக பெண் கவுன்சிலர் போராட்டம்

காரமடை நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறி திமுகவை சேர்ந்த கவுன்சிலர் நித்யா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தேக்கம்பட்டி பகுதியில் இருந்து குடி தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் காரமடை நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

முறையற்ற குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதாக குற்றம்சாட்டி திமுக-வை சேர்ந்த கவுன்சிலர் நித்யா மங்கலக்கரை புதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி அமர்ந்து இன்று (பிப்.13) போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் உள்ளூர் மக்களும் இணைந்து கொண்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட நித்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வநியோகம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...