கோவை இதய தெய்வ மாளிகையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

தனித் தலைமையாக எடப்பாடியார் பொதுச் செயலாளராக வந்ததிலிருந்து அதிகப்படியான இளைஞர்களும், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை: கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவில் புதியதாக இளைஞர்கள் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்சுணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.



அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக கட்சியின் சால்வை அணிவித்து ரோஜா மலர் கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, தனித் தலைமையாக எடப்பாடியார் பொதுச் செயலாளராக வந்ததிலிருந்து அதிகப்படியான இளைஞர்களும், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவதாக தெரிவித்தார்.



தற்பொழுது நீங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த அதிமுக கட்சி சிறப்பான கட்சி எனவும், இது ஒரு குடும்பம் போன்றது எனவும் தெரிவித்தார். மேலும் இந்த கட்சியில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும் எனவும் கூறினார். இந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல் இருப்பார்கள் என தெரிவித்த அவர், திமுகவில் அது போன்று இருக்காது என சாடினார்.

மேலும் எந்த பிரச்சனையானாலும் நாங்கள் உடன் இருப்போம் எனவும், வேலை வாய்ப்பு உட்பட சுக, துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவோம் என தெரிவித்தார். தான் அமைச்சராக இருந்த பொழுது கோவை மாவட்டத்தில் மட்டும் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்.

இந்த கட்சியில் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டாம் எனவும், கிடைக்கின்ற நேரத்தில் பணியாற்றலாம் எனவும், தேர்தல் காலங்களில் மட்டும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என இளைஞர்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உங்களை நாங்கள் எங்கள் குழந்தைகள் போலும் தம்பிகள் போலும் பார்ப்போம் எனவும் கூறினார். நீட் தேர்வு பற்றி திமுக ஏமாற்றி வருவதாகவும், ஆனால் எடப்பாடியார் 7.5% இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததை குறிப்பிட்டார். மேலும் கொரோனா காலத்தில் பரிட்சையின் பொழுது அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தாக தெரிவித்த அவர், தற்பொழுது 52 சதவிகிதம் பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால் அதற்கு அம்மாவின்(ஜெயலலிதா) அரசுதான் காரணம் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் எந்த தொழில்களும் நடைபெறுவதில்லை அனைத்திற்கும் விலை உயர்வு தான் என கூறிய அவர், ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புவதாகவும், அதற்காக நீங்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...