மதுக்கரை அறிவொளி நகரில் நகைகளுக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில், கம்பெனிக்குள் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.


கோவை: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகைகளுக்கு அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில் கம்பெனிக்குள் தீ பற்றி உள்ளது.



இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



உடனடியாக கோவைப்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



மின் கசிவால் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில், உரிய விசாரணைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த கம்பெனியை சுற்றி வேறு சில கம்பெனிகளும் இருப்பதால் அவர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த வண்ணம் உள்ளது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...