கோவையில் டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி - மாணவர்கள் பங்கேற்பு

நமக்குள் அனைத்தும் சமநிலையில் இருக்க வேண்டும். நிலைத்தன்மையும் இருக்க வேண்டும். சில திரைப்படங்கள், பல தவறான வழிகாட்டுதல்களையும் போதிக்கின்றன. நல்ல கருத்துக்களை மனதில் அவை விதைக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: 2024 - உலக சாதனையாக போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த, கோவை மாநகர காவல் துறை மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை அதிக அளவில் மாணவர்கள் ஏற்றுக் கொண்டு, உலக சாதனை படைத்தனர். இதில் மாணவ, மாணவியர்கள் டிஜிட்டல் வடிவில் உறுதிமொழி அளித்தனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை பார்க் கல்வி குழுமங்களின் பரப்புரையாளர் சுந்தரராஜன் வரவேற்றார்.



நிகழ்ச்சியில் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தலைமை வகித்து பேசினார். பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி முன்னிலை வகித்து பேசியதாவது, இந்த உலக சாதனை நிகழ்வில் மொத்தம் 1,37,294 மாணவர்களிடம் உறுதிமொழிகள் பெறப்பட்டதில், 1,12,375 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

இந்த முயற்சியையும் பதிவையும் உலக பதிவு யுனியன் ஏற்றுக் கொண்டு, உலக சாதனையாக அங்கீகாரம் அளித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. உலக பதிவு யுனியன் இன்று 2024 பிப்ரவரி 6ம் தேதி, இதற்கான சான்றை நமக்கு அளித்துள்ளது.



இந்த சாதனை முயற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 180 கல்லூரிகள் பங்கேற்றன. சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான 2023 ஜூன் 26 ல் இந்த இயக்கம் துவக்கப்பட்டது. டிஜிட்டல் வடிவில் உறுதியேற்பு 2023 செப்டம்பர் 12-ம் தேதி துவக்கப்பட்டது. 2024 ஜனவரி 31-ம் தேதி நிறைவு பெற்றது. 2023 டிசம்பர் இறுதியில் ஒரு லட்சம் உறுதியேற்பை எட்டியது. இவ்வாறு அவர் பேசினார்.



விழாவில் உலக சாதனை யுனியன் பிரதிநிதி கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் கலந்து கொண்டு சான்றிதழை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் முன்னிலையில் பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவியிடம் சான்றிதழை வழங்கினார்.



இந்த சாதனை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற கல்லூரிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பாராட்டி பேசியதாவது, தலைமை என்பது மிக முக்கியமானது. நமக்குள் அனைத்தும் சமநிலையில் இருக்க வேண்டும். நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்.

சில திரைப்படங்கள், பல தவறான வழிகாட்டுதல்களையும் போதிக்கின்றன. நல்ல கருத்துக்களை மனதில் அவை விதைக்க வேண்டும். கோவை மாநகரில் பல்வேறு விதங்களில் போதை பொருட்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து தடுத்து வருகிறோம். போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒழிப்பதை விட, அது வரும் முன்பே தடுப்பது மிக அவசியம். போதை பொருள் பக்கமே செல்லாமல் இருக்க மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் உறுதி ஏற்பதால், உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கோவையில் போதை பொருட்கள் நுழையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இவ்வாறு பேசினார்.

இதில் பங்கேற்ற கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, போதை பொருள் இல்லாத கோவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர். இவர்கள், மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, போதை பொருட்கள் உள்ளனவா என்பதையும் கண்காணிப்பார்கள். மாணவர்களுக்கான ஹெல்ப்லைன் ஒன்றும் உருவாக்கப்படும். மேலும் விபரங்களுக்கு http://drugfreekovai.com இணையத் தளத்தை பார்வையிடலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...