நீலாம்பூரில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை - கோவையில் MyV3ads உரிமையாளர் விளக்கம்

விளம்பரத் துறையும், வியாபார துறையும் எத்தனை நாட்கள் இருக்குமோ அவ்வளவு நாட்கள் எனது நிறுவனம் இயங்கும் என MyV3ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் தெரிவித்தார்.


கோவை: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் MyV3 ads நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என ஆசை காட்டி மோசடி செய்தது, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்தது ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்க்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேற்று(பிப்.5) அவர் கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த MyV3Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், என் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்துள்ளேன். நிறுவனம் வேறு பெயரில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், அவர்கள் புகார் அளித்த அந்த நிறுவனத்தில் தானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது அவர்கள் வந்து புகார் அளிப்பதற்கான நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார். தற்பொழுது இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம்.

விளம்பரத் துறையும் வியாபார துறையும் எத்தனை நாட்கள் இருக்குமோ அவ்வளவு நாட்கள் எனது நிறுவனமும் இயங்கும் எனவும் தெரிவித்தார். அன்றைய தினம் கோவை நீலாம்பூர் பகுதியில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை. அவர்களாகவே தன் எழுச்சியாக வந்தனர். அவர்களைத் தான் ஒழுங்கு மட்டுமே படுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் பின்புறம் இல்லாமலேயே இத்தனை பேர் தன் எழுச்சியாக வந்தபோதே நான் ஜெயித்து விட்டேன். தங்கள் பின்னால் எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லை. தங்கள் நிறுவனத்தின் பொருட்களை போலி என கூறுபவர்கள் அதனை நிரூபிக்கட்டும். அவை போலி என்றால் அதற்கான தர சான்றிதழ்களை அளித்தவர்கள் யார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தங்கள் நிறுவனத்தில் இருப்பதெல்லாம் இந்திய மருந்துகள். பாரம்பரிய மருந்துகள். இதனை விற்பதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. மக்கள் அவர்களாகவே விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். அந்த பொருட்கள் தயாரித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்.

திரைப்படத்திற்கு எப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால் அந்த திரைப்படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுமோ அதுபோன்று எதிர்மறை விமர்சனங்களால் தங்கள் நிறுவனம் தற்பொழுது மேலும் உயர்ந்துள்ளது. மேலும் யாரேனும் அனுமதி பெற்று தந்தால் அன்றைய தினம் கூடிய கூட்டத்தைப் போல் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை தன்னால் கூட்ட முடியும். தங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருட்களை மட்டுமே வாங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...