அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெறவுள்ளது என கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட பணிகள் இன்னும் முடிவடையாதநிலையில், பொதுப்பணித்துறையினர் ஒருமாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். அந்த பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று(பிப்.4) செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெற உள்ளதாகவும், அதற்காக ஏற்கனவே சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து கலந்தாய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக மருத்துவத்துறை வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு என்பது இதுவே முதல் முறை என்றும், தமிழகத்தில் 20 மருத்துவ மாவட்டங்களில் எங்கே எல்லாம் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மருத்துவர்களை பணியில் அமர்த்திட வேண்டும் என்ற அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.



தேர்வாகியுள்ள 1021 பேரை 20 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் என்று கண்டறியப்பட்டு வெளிப்படையாக காலிப்பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 1127 பணியிடங்களில் நியமிக்கும் வகையிலான கவுன்சிலிங் நடைபெற்று சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேபோல் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புடன் நிருத்தி வைக்கப்பட்டுள்ள மருந்தாளுனர்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், அவர்கள் கொரோனா காலகட்டத்திற்கான மெரிட் மதிப்பெண்கள் கேட்டுள்ளதால் அதற்காக அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மருந்தாளுநர்கள் கொரோனா காலத்தில் வெளியில் இருந்து பணியாற்றாதவர்கள் என்பதால் இவர்களுக்கு மெரிட் மதிப்பெண் கொடுத்தால் அது அநீதியாக மாறிவிடும் என்பதற்காகவே நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள ழூழலில் அப்பிரச்சினை முடிந்தவுடன் இதற்கான பட்டியலும் வெளியிடப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2300 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள் எனவும், சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக அப்பணியிடங்களில் அவர்களை கொண்டு நிரப்பப்படும் எனவும் ஒருவர் கூட விட்டுப் போக கூடாது என முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எம்ஆர்பி இல் சேர்ந்தவர்கள் என்பதற்காக காலி பணியிடங்கள் உருவாகும் போது அவர்கள் பணியில் சேர்த்துக் கொல்லப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட பணிகள் இன்னும் முடியாத நிலையில் பொதுப்பணித்துறையினர் ஒருமாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...