கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே நாளில் இரண்டு கூலி தொழிலாளர்கள் பலி

மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்த சாலை விபத்தில் ராஜசேகரன் என்ற கூலித்தொழிலாளியும், உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே நிகழ்ந்த விபத்தில் மணிகண்டனம் என்ற மற்றொரு கூலித்தொழிலாளியும் உயிரிழந்தனர்.


கோவை: கோவை கோவில்மேடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன்(63). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மேட்டுப்பாளையம் ரோடு இடையர்பாளையம் ஜங்சன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மீது மோதியது. இதில் லாரி ஏறி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவை கெம்பட்டி காலனி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(30). கூலி தொழிலாளி. இவர் (ஜன.25) மொபட்டில் சென்று கொண்டிருந்தார். உக்கடம் பைபாஸ் ரோடு சேத்துமாவாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...