கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் 101 அடி கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்க கூடிய தேசியக் கொடி ஏற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஊர்க்காவல் படையினரின் பணிகளை பாராட்டும் விதமாக கோயமுத்தூர் இன்னல் வீல் கிளப் சார்பாக ஒரு இலட்சம் மதிப்பிலான ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 24மணி நேரமும் பறக்க கூடிய அளவில் 101 அடி கம்பத்தில் தேசியக் கொடியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதனை அடுத்து உள் நாட்டு பாதுகாப்பு பணிகளில், முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும், ஊர்க்காவல் படையினர், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, கட்சி தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊர்க்காவல் படையினரின் பணிகளை பாராட்டும் விதமாக கோயமுத்தூர் இன்னல் வீல் கிளப் சார்பாக ஒரு இலட்சம் மதிப்பிலான ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இன்னர் வீல் கிளப் அமைப்பின் தலைவர் புவனா சதீஷ், கோவை மாநகர ஊர்க்காவல் படை உதவி ஆணையர் தேன்மொழி ராஜராம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.



குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இதில், அலுவலக வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகளை வழங்கினார். இரவு நேர பணிகளின் போது ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பு கருதி இந்த உடைகள் வழங்கப்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...