நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, ஆடு, மாடு, பன்னிகளுடன் கூட்டணி - உடுமலையில் சீமான் பேச்சு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டு அபார வெற்றி பெறுவோம் என்றும் ஓட்டுக்காக நான் பேசுவேன் இல்லை. நாட்டுக்காக பேசுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் தாஜ் திடலில் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டு அபார வெற்றி பெறுவோம், ஓட்டுக்காக நான் பேசுவேன் இல்லை. நாட்டுக்காக பேசுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆடு, மாடுகள், பன்னிகளுடன் திமுக கூட்டணி வைக்க தயாராக உள்ளது என பேசினார். சமூக மாற்றத்தை மாற்ற முடியாது. தமிழ் நாடாக மாற்றுவேன். மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம். சென்னையில் உறுதியாக நினைவிடம் கட்டுவேன். அப்பொழுது கலைஞர் சமாதி எங்கு போகும் என்று எனக்கு தெரியாது.

தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு. உலகம் முழுவதும் தமிழை பரப்புவோம். இந்தி மொழியை பற்றி கவலை இல்லை. தமிழ் மொழி சாதனை படைக்க வேண்டும் என்பது என் லட்சியம். திராவிடம் என்ற சொல்லுக்கு திமுகவிற்கு அர்த்தம் தெரியாது. நீட் தேர்வு ரத்து கையெழுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கோரி செங்கல்லை வைத்து மேடைகள் பேசுவார்கள் தவிர நேரில் கொடுக்க தைரியம் இல்லை.

சேலம் மாநாட்டுக்கு 58 கோடி 5000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தவர்கள். வெள்ளம் சேதம் பகுதிகளுக்கு உதவாதது ஏன்?. மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பட வேண்டும். குஜராத் மற்றும் காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனையில் அவலம் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திமுக மாநாட்டில் மாணவன் படிப்புக்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்றால் தமிழில் ஆட்சி வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை ஆவேசமாக பேசினார். வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...