கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்கள் செலுத்த சிறப்பு முகாம்

வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 27.01.2024 மற்றும் 28.01.2024ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 27.01.2024 மற்றும் 28.01.2024ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 27.01.2024 மற்றும் 28.01.2024ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.56 மற்றும் 57ல் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் பகுதிகளிலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 75 மாரியம்மன் கோவில் தெரு சீரநாயக்கன்பாளையத்திலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.85ல் போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வார்டு எண்.87-ல் குனியமுத்தூர் அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம், அம்மன் கோவில் சாலையிலுள்ள அக்பு- வணிக வளாகத்திலும், வடக்கு மண்டலம் வார்டு எண்.15 சுப்ரமணியம்பாளையம், அங்கன்வாடி மையத்திலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா, சங்கனூர் நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62 பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும் 27.01.2024 மற்றும் 28.01.2024 தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது.

மேலும், 27.01.2024 அன்று சனிக்கிழமை மட்டும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.35-ல் தேவாங்க நகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்திலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது. இதுதவிர 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...