உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே நிலப்பரப்பு பகுதிக்கு அதிகளவு வர துவங்கியுள்ளன.

குறிப்பாக உடுமலை மூணாறு சாலையில் காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன்உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். எனவே உடுமலை மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்ப கூடாது. அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி புகைப்படம் எடுப்பதோ முயற்சி செய்யக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...