பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கொண்டாட்டம்

யானைப்பொங்கல் விழாவில், மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழைப்பழம், கொள்ளு, ராகி, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்தாண்டு டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் யானைகளை குழிப்பாட்டி, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு முன்னதாக அங்குள்ள விநாயகரை யானைகள் தும்பிக்கியை தூக்கி மண்டியிட்டு வணங்கியது.



பின்பு மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழைப்பழம், கொள்ளு, ராகி, அரிசி சாதம் ஆகியவை ஒவ்வொரு யானைக்கும் வழங்கப்பட்டது.



இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.



மேலும் சுற்றுலா பயணிகள் கூறுகையில் வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம், ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், இங்கு ஒரே இடத்தில் 26க்கும் மேற்பட்ட யானைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...