விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் மௌன அஞ்சலி ஊர்வலம்

மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினரும் ஊர்வலமாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்தில் திமுக , அதிமுக, பாஜக , கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உயிரிழந்தார்.



அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



திருப்பூர் குமரன் நினைவகத்தில் துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இந்து முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...