வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம் - மருதமலையில் முன்னேற்பாடுகள் தீவிரம்

மருதமலையில் கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு, மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கோவை: கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7- ம் படை வீடு என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் யாக சாலை வேள்வி பூஜை நடைபெற்று வருகி றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

புதிதாக கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, சேச வாகனத்தில் ராஜ தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

சனிக்கிழமை சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு, மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...