ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்- கோவை ஆட்சியர்  அழைப்பு

சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.


கோவை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்). உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் GS EMPOWER SKILL நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலாக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும்

திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும் அளிக்கப்படும்.

மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் ( National Hospital, Ezhil Hospital, Facility India-man power company etc... TVS co Good food & laugh PEGATRAN, Horizon Packing P.Ltd Tindivanam, Suja shoes Industry Tindivanam, SIPCOT Tindivanam, RMR Hospital - Thiruvannamalai, SPMS-Thiruvannamalai, Don Bosco Thiruvannamalai) போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் (www.tahdco.com)ன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும் என தெரிவிக்கப்படுள்ளது.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...