கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சி - கொண்டாட்டத்தை விமர்சித்த நடிகர் ரஞ்சித்

ஹாப்பி சண்டே நிகழ்ச்சியை ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.


கோவை: Happy Street நிகழ்ச்சியில் பெண்களை ரோட்டில் நிக்க வைத்து அரைகுறையாக துணி அணிந்து ஆடுவது மிகவும் வேதனை அளிப்பதாக கோவையில் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

கோவை சவுரிபாளையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை ஆடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஞ்சித்,

நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக இருப்பதாகவும் நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம்,கோலாட்டம், குச்சி ஆட்டம் அது போன்ற கலைகள் நம் மண்ணில் பரவிருந்த நிலையில் தற்போது மண்ணோட மண்ணாக போய்விட்டதாக கூறினார். நான் ஒரு திரைப்பட கலைஞராக சொல்கிறேன், இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் சினிமா பட நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம் பணம் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

அந்த காலத்தில் வயக்காட்டில் குழந்தையைத் தொட்டில் போடும்போது வேலை செய்யும் போதும் கும்மி பாடி ஆனந்தமாக இருந்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போனை பயன்படுத்தி செல்போனை தான் காதலிக்கிறோம் தவிர மனிதர்களை யாரும் காதலிக்கவில்லை என்று கூறினார். இந்த வள்ளி கும்மியாட்டத்தில் மருமகள், மாமியார், பேரன், பேத்தி ஆகியோர் ஒன்றிணைந்த ஆடும் ஒரு ஆட்டம் ஆகும்.

Happy Sunday, Happy Street நிகழ்ச்சி நடத்தும் நிகழ்ச்சியாளர்களை எங்கிருந்துடா வரீங்க என்று கேள்வி எழுப்பினார்??? பெண்களை ரோட்டில் நிக்க வைத்து அரைகுறையாக துணி அணிந்து ஆடுவது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார். எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன் என்றும் ஊருக்கு நடுவுல அரைகுறையாக துணிந்து சினிமா பாடலுக்கு ஆடுவது Happy Sunday யா என்று கேள்வி எழுப்பினார். உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதும், நடனத்துக்கு செல்வதும் தவறு இல்லை என்றார்.

யார் மகனோ யாரோடு ஆடுவது??யார் பெண்ணோ யாரோடு ஆடுவது??மன அழுத்தத்தை போக்க தெருவில் ஆடுவது ஒரு ஹாப்பியா?? அதுக்கு ஒரு பாராட்டா என்று விமர்சனம் செய்தார்.

இது போன்ற கலாச்சாரம் அடுத்த பேரழிவு நோக்கி எடுத்துச் செல்லும் எனவும் முதலில் மொபைல் போன் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.

ஹாப்பி சண்டே ஹாப்பி ஸ்ட்ரீட் ஒரு தாய்லாந்து, சிங்கப்பூர் போல கலாச்சாரத்தை நாம் வளர விடக்கூடாது வளர விடமாட்டோம் என நம்புகிறேன் என்று கூறினார்.

ஹாப்பி சண்டே ஹாப்பி சண்டே ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...