கோவாவில் நடைபெறும் தேசிய களரி போட்டி - உடுமலையிலிருந்து வீரர்கள் வழி அனுப்பி வைப்பு

தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்டஸ் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அணிக்காக 8 பேர் பங்கேற்கின்றனர்.


திருப்பூர்: இந்திய அணி சார்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 37 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தொடங்கி வைக்கிறார்.

இதில் களரி பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் களரி மார்ஷியல்ஆர்டஸ் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அணிக்காக 8 பேர் பங்கேற்கின்றனர்.



இந்த நிலையில் உடுமலையிலிருந்து ரயில் மூலம் கோவை சென்று கோவையில் இருந்து ரயில் மூலம் கோவா செல்கின்றனர். கோவா செல்லும் களரி வீரர்கள் உடுமலையிலிருந்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுக்கா செயலாளர் வடிவேல் நூலகர் பணி நிறைவு அலுவலர் கணேசன் சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமான கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...