குண்டடம் பகுதியில் வாழை சாகுபடி - எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: பனிப்பொழிவு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என குண்டடம் வாழை விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் ருத்ரவாதி, குண்டடம், முத்துகவுண்டன்பாளையம், இடையப்பட்டி, தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது :- இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வாழை சாகுபடி செய்துள்ளோம். நாட்டு நேந்திர ரக வாழை சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்ய வாழை கிழங்கு, உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

வாழை வாழை கிழங்கு நடவு செய்து 1 வருடத்தில் வாழைதார் விற்பனைக்கு அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வாழை தார் கிலோ ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.

இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போல் நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...