நமது குப்பை, நமது பொறுப்பு, குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அறிவுரை

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ எச்சரித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து மக்கும்‌ குப்பைகளை பச்சைநிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌,‌ மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌ சேகரித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்க வேண்டும்‌.

பச்சை மற்றும்‌ நீல நிற குப்பைத்‌ தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்‌/ நிறுவனங்களில்‌ முறையாக வைத்து பொதுமக்களுக்கும்‌ வாடிக்கையாளர்களுக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌. கோவை‌ மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின்‌ பங்களிப்பை முக மலர்ச்சியுடன்‌ செய்து தர கேட்டுக்‌ கொள்ளப்படுகிறீர்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...