ஸ்மார்ட் சிட்டியின் குப்பைத் தொட்டிகளா இவை?

விரைவில் ஸ்மார்ட் சிட்டியாகயாக உருவாக இருக்கும் கோவை மாநகரை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. குளங்களை மேம்படுத்துதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், மொபைல் டாய்லெட்டுகள், பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்தல் என பல்வேறு திடங்களை அடுக்கிகொண்டே போகலாம்.



ஆனால், கோவை மாநகரின் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளைத் தான் கண்டு கொள்ள ஆள் இல்லை.



இன்று பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் உபயோகிக்க முடியாத நிலையில் கிடக்கின்றன. பல ஆண்டுகளாக மழை மற்றும் வெயிலில் காய்ந்ததால் துருப்பிடித்து உடைந்து காணப்படுகின்றன. உடைந்து போன குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் இடும் குப்பைகள் வீதிக்குள் வலம் வருகின்றன.



அவற்றுள் ஒரு எடுத்துக்காட்டே கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் வழியில் வகைப்பட்டுள்ள குப்பை தொட்டி.



எது குப்பை, எது குப்பைத் தொட்டி என கண்டறியவே முடியாதவாறு இந்த குப்பைத் தொட்டி படு மோசமான நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி, காமராசர் சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளும் இதே நிலை தான் உள்ளன.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களிலும் ஒரே அளவிலான குப்பைத் தொட்டிதான் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் குப்பை தொட்டி நிறையும் போது, குப்பைகளை மக்கள் சாலை ஓரமாக போட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மக்கள் மாற்றத்தை விரும்பி வரும் இந்த நேரத்தில் அரசும் இது போன்ற பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாற்றம் அதிகாரிகளிடம் வர வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...