உலக நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக முத்தத்தால் ஓவியம் - ஓவியர் ராஜா அசத்தல்

உலக நாயகன் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தால் அவரது ஓவியத்தை வரைந்து நேரில் பார்த்து பரிசளிப்பதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி முத்தம் தந்தவாரு உலக நாயகன் கமல்ஹாசனின் ஓவியத்தை ஓவியர் ராஜா என்பவர் மிக நேர்த்தியாக வரைந்து அனைவரது வனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தலைசிறந்த நடிகராக போற்றப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் மட்டுமின்றி சினிமாவில் இயக்குனர்கள் கிட்ட ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கும் உலக நாயகனுக்கு உலகம் எங்கிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அன்பு மழை பொழிவார்கள். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் ராஜா வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இருக்கின்றார்.



ஓவியர் ராஜா லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி கமல் உருவத்தை முத்தத்தால் வரைந்திருக்கின்றார். கட்டிப்பிடி வைத்தியம் கற்றுத் தந்த உலக நாயகனுக்கு அன்பு முத்தம் தரவே இது போன்ற ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் ராஜா தெரிவித்திருக்கின்றார்.



உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்று இதனை அவருக்கு பரிசாக தரவும் காத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...