ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.



கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.



இதில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மைய மருத்துவர்கள் பாரதி, முத்துக்குமார் ஆகியோர் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, கால்பாத உணர்ச்சி இன்மை, கால்பாத எரிச்சல், இடுப்பு ஜவு விலகல் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



மேலும் முகாமில் இலவசமாக பல் பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூபாய் 1500 மதிப்பு எலும்பு சத்து பரிசோதனை 50 ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம், துடியலூர் லட்சுமி மருத்துவ மனை, வாசன் ஐ கேர், பி.வி.கே. டெண்டல் கேர், மற்றும் துளசி பார்மஸி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, உள்பட சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...