தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் வட்டார சுகாதார சபைக் கூட்டம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார சபைக் கூட்டம் கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன்புதூரில் நடைபெற்றது.


கோவை: மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து வட்டார சுகாதார சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை துடியலூர் அடுத்துள்ள பழனிகவுண்டன்புதூரில் உள்ள தங்கமணி திருமண மண்டபத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் தாளியூர் வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சுகாதார பணிகள் உதவி திட்ட மேலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவலிங்கம் சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு, குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.



இந்த கூட்டத்தில் தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்துதல், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆரம்ப நிலை, 2ம் நிலை மற்றும் 3ம் நிலை வசதிகளுக்கான தர மதிப்பெண்களை அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், விபத்து, காயம் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல், மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கருத்துகள் பதிவு செய்து சுகாதார துறை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.



இந்த கூட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட குருடம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம், தடாகம், அசோகபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள், கூடலூர் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் சார்பில் மன்ற தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார கல்வி துறை, வாட்டார ஊட்டச்சத்து துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜ், பாஞ்சாலி, பாலு உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...