மலேசியாவில் உள்ள தனது மனைவியை மீட்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

மலேசியாவில் உள்ள தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: மலேசியாவில் சிக்கியுள்ள தனது மனைவியை மீட்க வலியுறுத்தி தனது குழந்தைகளுடன் கணவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் தனலட்சுமி பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மலேசியாவில் வீட்டு வேலைக்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதை தொடர்ந்து ஏஜென்ட் ஒருவர் மூலம் ஒன்றரை லட்சம் செலவு செய்து மலேசியா சென்றுள்ளார். ஆனால் ஏஜென்ட் கூறியது போல வேலை வழங்காமல் அதிக வேலை வாங்கியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே வேளையில் சரவணன் தனலட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வர வலியுறுத்தியுள்ளார். ஆனால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இந்தியா செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத்திறனாளியான தன்னால் தனது மகள் மற்றும் மகள் ஆகியோரை கவனிக்க முடியாதால் தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...