திமுக ஆட்சியில் தமிழகம் அழிவுபாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி புகார்

ஒட்டு மொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவினை தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


திருப்பூர்: நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கட்சியினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காங்கேயம் வந்திருந்தார்.



அப்போது காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே 52 அடி நீளம் உயரமுள்ள கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்தார்.



பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதி நெசவு வேளாண் தொழில் அதிகம் உள்ளது.

ஆனால் இந்த தொழில் செய்பவர்கள் விடியா திமுக அரசால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் ஏற்றி கொடுக்கபட்டது. ஆனால் திமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. திமுக அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது.

அதேபோல் நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் விவசாயிகள் மகிச்சியாக இருந்தனர். ஆனால் விவசாயம், நெசவு தொழில் திமுக ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும். அதிமுக நிருத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...