தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் கயல்விழி ஆய்வு

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறை, அல்ட்ரா கதிர்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இதய சிகிச்சை அறை, மருந்தக இருப்பு அறைகளும், முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர், பணி செவிலியர் அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள் அமைக்கப்படுவதாக அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் கூறியதாவது,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.



அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறை, அல்ட்ரா கதிர்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இதய சிகிச்சை அறை, மருந்தக இருப்பு அறைகளும், முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர், பணி செவிலியர் அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள் அமைக்கப்படுகிறது.

2-ம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, நோயாளிய அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தும் அறை, பணி மருத்துவர், செவிலியர் அறைகள், கழிவறை, சாய்தளவசதிகளுடனும், 3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவசிகிச்சை பிரிவு, அறுவைசிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு), ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர், செவிலியர் அறைகளும், 4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர், செவிலியர் அறைகள், கழிவறை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள், பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், 6-ம் தளத்தில் கண்சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வெ.கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் தவச்செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...