சாதி பாகுபாடு காட்டும் மாவட்ட வேளாண் இயக்குநர் - உற்பத்தி குழு உறுப்பினருமான திமுக நிர்வாகி புகார்

கோவை மாவட்ட வேளாண் இயக்குநர் சாதி ரீதியாக செயல்படுவதாக மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினரும், திமுக பிரமுகருமான திப்பம்பட்டி ஆறுசாமி குற்றச்சாட்டியுள்ளார்.


கோவை: உரம் கையிருப்பு உள்ளதை கண்டுபிடித்து கூறிய காரணத்தினால், தன்னை தன்னை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக திப்பம்பட்டி ஆறுசாமி புகார் தெரிவித்துள்ளார்.



திமுக ஆதிதிராவிடர் மாநில இணை செயலாளராக இருப்பவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. இவர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வேளாண் உற்பத்தி குழுவில் இவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கேட்ட பொழுது பழைய நிர்வாகிகளுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்ததாகவும், ஆனால் அதில் பரமசிவம் என்பவருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேறுயாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.



அப்போது இவரும் இவரது ஆதரவாளர்களும் இச்செயலுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தான் காரணம் என கூறி கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழக்கங்களை எழுப்ப கூடாது என்றனர்.



இது குறித்து ஆறுச்சாமி கூறுகையில், நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பை சார்ந்தவன். தற்போது வேளாண்மை உற்பத்தி குழுவில் புதியதாக பொறுப்பு போடப்பட்டுள்ளது என்பது சாதி ரீதியான தாக்குதல். மேலும் தான் 1977ல் இருந்து திமுக வில் உறுப்பினராக இருந்து தற்போது ஆதிதிராவிடர் மாநில இணை செயலாளராக இருக்கிறேன் என தெரிவித்த அவர், தான் ஒரு பேச்சாளர் எனவும் முதலமைச்சரின் மக்கள் திட்டங்களை கிராமம் கிராமமாக சென்று எடுத்துரைத்து வரும் எனது குரலை குறைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் எனக்கு அளித்து வரும் அங்கீகாரத்தை அதிகாரிகள் சாதி ரீதியாக பிடிக்காமல், திட்டமிட்டு என்னை வெளியேற்றி உள்ளனர் என கூறினார். மேலும் இங்குள்ள அதிகாரிகள் சாதி ரீதியாக செயல்படுகிறார்கள் என்பது தன் வேதனை அளிக்கிறது என்றார்.

வேளாண் உற்பத்தி குழு மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனையை தாம் எடுத்து கூறும் போது அப்போதைய மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுக்கும் படி கூறுவார் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற போதும் அதிகாரிகள் செய்கின்ற தவறுகளை தாங்கள் சுட்டிகாட்டுவோம் எனவும், தற்போது உரம் கையிருப்பு இல்லை என அதிகாரிகள் சாதித்த நிலையில் உரம் கையிருப்பு உள்ளதை கண்டுபிடித்து நாங்கள் கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக வேளாண் PA மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரும் தன்னை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...