தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக வருமானத்துறை சோதனை - அவரது ஆதரவாளர்கள் கண்டனம்

கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர், மார்ட்டின் வீட்டின் முன்பு குவிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: தொடர் சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத நிலையில், மீண்டும் மீண்டும் சோதனை செய்வதா என மார்ட்டின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் ஏந்த முகாந்திரம் இல்லாமல் தொடர் சோதனை செய்து வருவதாக கூறி அவரது வீட்டின் முன்பு அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு மார்டின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.

நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் நடத்தி சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத தகவலின் அடிப்படையில் எந்த ஒரு முகாந்திரமும் இன்றி தொடர் சோதனையில் ஈடுபடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் தொடர்ந்து ஐந்தாவது இன்றும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...