காவேரி கூக்குரல்‌ சார்பில்‌ பல்லடத்தில் வரும் 15ம் தேதி சந்தன மரம்‌ பற்றி கருத்தரங்கு

மானாவாரி நிலங்களில்‌ மர வளர்ப்பை ஊக்குவிக்கவும்‌, சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும்‌ கொண்டு செல்லவும்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ கோடிகளை கொடுக்கும்‌ சந்தனம், சாமானியனுக்கும்‌ சாத்தியமே என்ற கருத்தரங்கை வரும்‌ அக்டோபர்‌ 15-ம்‌ தேதி பல்லடத்தில்‌ உள்ள சந்தன மரப்‌ பண்ணையில்‌ நடத்த உள்ளது.


திருப்பூர்: கருத்தரங்கில்‌ சந்தன மர சாகுபடி தொழில்‌ நுட்பங்கள்‌, விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள்‌ குறித்து வனவியல்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ முன்னோடி விவசாயிகள்‌ விளக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின்‌ மானாவாரி நிலங்களில்‌ மர வளர்ப்பை ஊக்குவிக்கவும்‌, சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும்‌ கொண்டு செல்லவும்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ கோடிகளை கொடுக்கும்‌ சந்தனம், சாமானியனுக்கும்‌ சாத்தியமே என்ற கருத்தரங்கை வரும்‌ அக்டோபர்‌ 15-ம்‌ தேதி திருப்பூர்‌ மாவட்டம்‌, பல்லடத்தில்‌ உள்ள சந்தன மரப்‌ பண்ணையில்‌ நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ பங்கேற்கும்‌ வகையில்‌ பெரிய அளவில்‌ நடக்க உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர்‌ சந்திப்பு சென்னை பிரஸ்‌ கிளப்பில்‌ இன்று (அக்‌.12) நடைபெற்றது.



இதில்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ கள ஒருங்கிணைப்பாளர்‌ தமிழ்மாறன்‌ அவர்கள்‌ பங்கேற்று செய்தியாளர்களிடம்‌ கூறியதாவது, தமிழ்நாட்டில்‌ மொத்த சாகுபடி நிலத்தல்‌ 50 சதவீத நிலம்‌ மானாவாரி நிலமாகவே உள்ளது.

இந்நிலங்களில்‌ டிம்பர்‌ மரங்களை நடுவதன்‌ மூலம்‌ விவசாயிகள்‌ நல்ல வருமானம்‌ பெற முடியும்‌. சந்தனம்‌, செம்மரம்‌, கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டு வாகை, நாவல்‌ போன்றவை மானாவாரி வளர்ப்புக்கு உகந்த மரங்களாகும்‌. குறிப்பாக வறட்சியான நிலங்களில்‌ சந்தனம்‌ மற்றும்‌ செம்மரம்‌ நன்றாக வளர்கிறது, இம்மரங்களுக்கு அதிக நீர்‌ தேவையில்லை. இம்மரங்கள்‌ அதிக விலை மதிப்புடையவை என்பதால்‌ விவசாயிகளுக்கு எதிர்காலத்தில்‌ நல்ல வருமானம்‌ நிச்சயம்‌.

கருத்தரங்கில்‌ சந்தன மர சாகுபடி தொழில்‌ நுட்பங்கள்‌, விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள்‌ குறித்து வனவியல்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ முன்னோடி விவசாயிகள்‌ விளக்க உள்ளார்கள்‌. பெங்களூரு மர அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப நிறுவனத்தைச்‌ சேர்ந்த விஞ்ஞானி ஈ. சுந்தர்ராஜ்‌ (ஓய்வு), விஞ்ஞானி செளந்தரராஜன்‌, மானாவாரி நிலத்தில்‌ செம்மரம்‌ சாகுபடி செய்துள்ள ஆசிரியர்‌ ராமன்‌, செம்மரச்‌ செம்மல்‌ கணேசன்‌ போன்றோர்‌ பங்கேற்க உள்ளார்கள்‌. மேலும்‌, மரம்‌ சார்ந்த விவசாயம்‌ குறித்து காவேரி கூக்குரல்‌ வல்லுநர்கள்‌ விளக்குவார்கள்‌.

விவசாயிகளின்‌ பொருளாதார முன்னேற்றம்‌, சுற்றுச்சூழல்‌, நதிகளின்‌ நீர்‌ ஆதாரம்‌ போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மரம்‌ சார்ந்த விவசாயம்‌ ஒரு தீர்வாக உள்ளதால்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ விவசாய நிலங்களில்‌ டிம்பர்‌ மரங்களை நட விவசாயிகளை க்குவிக்குவிக்கிறது. இதுவரை ஈஷா ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு காவேரி கூக்குரல்‌ மூலம்‌ தமிழகத்தில்‌ 1.10 கோடி மரங்கள்‌ நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 46 லட்சம்‌ மரங்கள்‌ நடப்பட்டுள்ளது. மேலும்‌ தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும்‌ நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்‌ பலா சாகுபடி நுட்பங்கள்‌, சமவெளியில்‌ நறுமணப்‌ பயிர்கள்‌ சாகுபடி போன்ற பயிற்சிகளையும்‌ நடத்தியது.

சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர்‌ மாவட்டம்‌, பல்லடத்தில்‌ உள்ள துரைசாமி ஐயா அவர்களின்‌ சந்தனமரப்‌ பண்ணையில்‌ நடைபெற உள்ளது. மரப்பயிர்‌ சாகுபடி செய்ய விரும்பும்‌ விவசாயிகள்‌ இக்கருத்தரங்கில்‌ பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. நிகழ்ச்சியில்‌ பங்கேற்க விரும்பும்‌ விவசாயிகள்‌ 94425 90079, 94425 90081 என்ற எண்களைத்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்‌.

காவேரி கூக்குரல்‌ குறித்து கூடுதல்‌ தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத்‌ தொடர்பு கொள்ளவும்‌. இவ்வாறு அவர்‌ கூறினார்‌.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...