தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிர்ப்பு - பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: தேங்காய் கரித்தொட்டி ஆலையால், விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. எந்தவித அனுமதியும் இன்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீர் பாதிப்பு அடைவதாகவும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், கூறி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த கறி தொட்டி ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.



இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் தேங்காய் கரி தொட்டி ஆலை அமைப்பதற்கான பணிகள் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



15 வருடங்களாக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆலைக்கு மீண்டும் அனுமதி அளித்து இருப்பதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புகார் மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...