திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


திருப்பூர்: இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமையில் நடைபெற்ற, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமை தாங்கினார்.



அமைப்பாளரும், பூலுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான தங்கவேலு வரவேற்புரையாற்றி பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



துணை அமைப்பாளர்கள் குண்டடம் ராமசாமி, கொடுவாய் நந்தகுமார், அலங்கியம் கவிஞர்.நிரஞ்சன் என்கிற கிருஷ்ணசாமி, மூங்கில்தொழுவு ஜெகதீசன், முளையாம்பூண்டி அர்ச்சுணன், பொள்ளாச்சி பாலன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வுகளில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரத்தில் சிறப்பாக நடத்துவது, அதே போன்று ஒன்றியம், நகரம் மற்றும் பேரூராட்சி தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் நந்தகுமார் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...