வின்ஸ்டார் நிறுவனத்தின் 200 கோடி மோசடி வழக்கு - 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை வழங்க உள்ள போலீசார்

சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் 15 லட்சம் பக்க கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை போலீசார் இன்று குற்றவாளிகளுக்கு வழங்க உள்ளனர்.


கோவை: சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 30 பேருக்கும் தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனம் சிவகுமார் என்பவரால் 2017ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.

இதை நம்பி சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் 1,686 பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் தராததால் இது இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இதில் 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை போலீசார் வழங்க உள்ளனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...