பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகர்மா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டில் 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.


கோவை: முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகே தமிழ்நாடு விஸ்வகமா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமனை கைது செய்து நடவடிக்கை கோரியும், தமிழக அரசு விஸ்வகர்மா சமூகத்தினருக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஸ்வகர்மா அமைப்பை சேர்ந்த பாண்டியன் கூறும்போது. விஸ்வகர்மா சமுதாயத்தில் அனைத்து சாதியினரும் அனைத்தும் மதத்தினரையும் சேர்க்க வேண்டும் என்று தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் தலைவர் முத்து வெங்கட்ராம் மீது சமுதாய அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் விஸ்வகர்மா 5 தொழிலுக்கான தச்சுத் தொழில், நகை தொழில்,சிற்பத் தொழில், பாத்திரம் தயாரிக்கும் தொழில், இரும்பு வேலை செய்பவர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கலந்து உறவினர் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசின் அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ஆலயங்களில் சாமி தங்க நகைகளை பராமரிக்க தலா ஒரு பொற்கொல்லர்யும்,தேர் மற்றும் ஆலய சாமி புறப்பட வாகனங்கள் பராமரிக்க மர தச்சர் ஒருவரையும் நிரந்தர பணியாளராக நியமிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதலில் கொடுக்கப்பட்ட படி விஸ்வகர்மா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டில் 5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியும் சென்னை,கோவை,திருச்சி,சேலம்,ஓசூர் பகுதியில் தங்க நகை பூங்காகள் மற்றும் பர்னிச்சர் கைவினப் பொருள்கள் விற்பனைக் கூடங்கள் அமைத்து தர வலியுறுத்தினர்.

பாரம்பரியமிக்க சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் விஸ்வகர்மா ஸ்பதிகளுக்கு தமிழக அரசு உயர் விருதுகள் வழங்கி கவேண்டும் எனவும் இரும்பு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி மற்றும் இலவச மின்சார வழங்கிட வலியுறுத்தினார்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...