கோவையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினர்

கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை கோவையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.


கோவை: பாரம்பரிய கலையான கும்மியாட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே உண்மையாட்டம் நிகழ்ச்சி நடத்தி வருவதாக கும்மியாட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை கோவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டத்தில் ஆடி அசத்தினர்.



இந்த கும்மி ஆட்டத்திற்கு பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை கௌமார மடாலயம் சார்பில் ஆதினங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தற்பொழுது பயின்று வருவதாகவும் மேலும் பல்வேறு துறையில் பணிபுரிய பெண்களுக்கு கும்மியாட்டம் பயிற்சி அளித்து வருகிறார்கள் கூறினார்.



மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த கும்மியாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடக்க இருப்பதாக கூறினார்.



வள்ளி கும்மி ஆட்டத்தில் பெண்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு ஆடி வருவதாகவும் பாரம்பரிய கலையான கும்மியாட்டம் தற்பொழுது அறிந்து கொள்வதாக கூறினார்.



அதனை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரியத்தை மறக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே உண்மையாட்டம் நிகழ்ச்சி நடத்தி வருவதாக கூறினார்.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...