டெல்லி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - தனக்கு எதுவும் தெரியாது என விளக்கம் கொடுத்த வானதி சீனிவாசன்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று வந்தது செய்திகள் வாயிலாக தான் தனக்கு தெரிந்ததாக கோவையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே தான் டெல்லி சென்று இருந்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையின் போது தான் உடனிருந்ததாக தவறான செய்தியை சில மீடியாக்கள் வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வந்தது என கூறினார்.

நேற்று மாலை முழுவதும் டெல்லியில் கட்சி பணிகளில் தான் இருந்தேன் எனவும் நான் அங்கு வேறு எந்த விசயத்திலும் ஈடுபடவில்லை எனவும் வானதி சீனிவாசன் கூறினார். மேலும் தொலைக்காட்சி செய்தியை பார்த்தும், பிறர் சொல்லியும் தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து இருப்பது தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது, நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து எனவும் தெரிவித்த வானதி சீனிவாசன், பா.ஜ.க மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றேன் எனவும் கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தேசிய தலைமை மட்டுமே முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...