திருப்பூரில் எலும்புகூடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

திருப்பூர் 45வது வார்டு குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது எலும்புகூடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார்.



திருப்பூர்: முதுமக்கள் தாழி மற்றும் அவற்றில் இருந்த எலும்புகள் வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் தெரிவித்தார்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வது வார்டு குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்பகுதியில் பள்ளம் தோன்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.



பள்ளம் தோண்டும்போது பழங்காலத்து முதுமக்கள் தாழி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பள்ளம் தோன்டும் பணி நிறுத்தப்பட்டு முதுமக்கள் தாழி பத்திரமாக எடுக்கும் பணி நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் பத்திரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்,



மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும்போது முதுமக்கள் தாழி இருந்தது. அவை பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. அதில் எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதுமக்கள் தாழி மற்றும் அவற்றில் இருந்த எலும்புகள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் அதனை ஆய்வு மேற்கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என சோதனை செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார். மாநகரின் மையப் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி எலும்புகளுடன் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...