முறையாக சம்பளம் வழங்கக்கோரி சோமையம்பாளையத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆப்பாட்டம்!

சோமையம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் 30 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டனர். ஆனால், அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை காலை 7 மணியளவில் ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது, 10 மணி வரை நீடித்தது.

அப்போது மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தும் தர வேண்டும்.

பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வங்கியில் செலுத்திய சம்பள பணத்தில் கணிசமான தொகையை திரும்ப கேட்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜ், ஊராட்சி செயலர் செழியன் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...