சனாதன விவகாரம்..!! கோவையில் திமுக - பாஜக போஸ்டர் சண்டை.!

திமுக சார்பில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே சமயம் பாஜக வினர் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் அருகில் ஒட்டப்பட்டுள்ளது.


கோவை: சனாதனம் விவகாரத்தில் திமுகவினரும், பாஜகவினரும் போட்டிக்கு போட்டியாக பல்வேறு இடங்ளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் மாநகரில் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜக வினர் இது குறித்தான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



திமுக சார்பில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதே சமயம் பாஜக வினர் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் அருகில் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...