பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் அமைய உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமையும் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு, தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை உள்ளது.

எனவே இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அங்கிருந்து வரக்கூடிய புகையால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.



பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...