கோவையில் 25 பவுன் கொள்ளை..!! உறவினர் வீட்டில் கைவரிசையை காட்டியவர் கைது..

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் ஆரோக்கியசாமி என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி நகைகளை திருடிய ஆரோக்கியசாமியின் உறவினரான மரியம் அமுதம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் உறவினர் வீட்டிலேயே 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மரியம் அமுதம் என்பவரின் செயல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி கணபதி தெய்வநாயகி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஜெபஸ்தையன் என்பவரது மகன் ஆரோக்கியசாமி 56. இவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது இரு மகன்களும் வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டிற்கு தேவையான டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தனது மனைவி, மகன் ஸ்டீபன் மற்றும் இரு மருமகளுடன் சிவகங்கை உள்ள உறவினர் வீட்டிற்கு ஆரோக்கியசாமி சென்றுள்ளார். சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து அன்றைய வசூல் பணத்தை கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி பிரேம் சனிக்கிழமை மாலை சிவகங்கைக்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்த ஆரோக்கியசாமி வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோவை காவல் பணியாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை கிழக்கு சரக உதவி ஆணையர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரோக்கியசாமியின் உறவினரான சித்தாபுதூர்வை சேர்ந்த சவரிமுத்து என்பவர் மகன் மரியம்அமுதம் 37 என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 25 சவரன் தங்க நகையை மீட்ட சரவணம்பட்டி காவல்துறையினர், மரியம் அமுதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



காவல்துறையினர் மேலும் கணபதி வ.உ.சி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மகன் கமலக்கண்ணன் 36 மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மகன் யூசப் 47 என்பவர்களையும் சிசிடிவி கேமரா பதிவுகளில் ஆய்வு மேற்கொண்டு காரமடையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. வீட்டை பூட்டி விட்டு செல்லுபவர்கள் அருகில் உள்ள காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதேபோல் தங்களது பகுதிகளை சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...