ஆன்லைன் விற்பனையால் பூக்கடைகளில் வியாபாரம் பாதிப்பு - பூக்கடை வியாபாரிகள் வேதனை

ஓணம் பண்டிகை நெருங்கி வரும்நிலையில் ஆன்லைன் மூலம் பூக்கள் விற்பனை, விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால் மலர் சந்தையில் பூ வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பூக்கடை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்



கோவை: செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, உள்ளிட்ட பூக்கள் ரத்து அதிகமாக இருந்தாலும்,ர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் எல்லாம் தற்போது வெறும் 20, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பூ வியபாரிகள் கவலையுடன் கூறினர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பூக்கள் சாகுபடி பல்வேறு இடங்களில் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பூக்களின் வியாபாரம் துவங்கி விடும்.

கோவையை பொறுத்தவரை தொண்டாமுத்தூர், வடிவேலாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஓணம் பண்டிக்கைக்கு முக்கியமாக திகழும், செண்டுமல்லி பூக்கள், கோழிக்கொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு கேரளா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

குறிப்பாக கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மலர் சந்தையில் இருந்து டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும். கோவை மக்களும் அதிகப்படியானோர் இங்கு வந்து தான் பூக்களை வாங்கி செல்வர்.

இந்நிலையில், ஆன்லைன் விற்பனை, விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால் மலர் சந்தையில் பூ வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பூக்கடை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபார சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், கடந்த 3,4 வருடங்களாகவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் மலர் வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும், கொரொனாவிற்கு பிறகு வியாபாரமே மாறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

முன்பெல்லாம் கோவையில் இருந்து தான் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அண்டை மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்த அவர், தற்போது மலர் உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கே சென்று பூக்களை வாங்கி கொள்கின்றனர் என்றார்.

அதுமட்டுமின்றி வேலை இழந்த இளைஞர்களும், குழுவாக பூ வியாபாரம் செய்ய துவங்கி விட்டதாலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை நடைபெறுவதாலும் கடந்த சில வருடங்களாகவே மார்கெட் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்றார். 300டன் வரை பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் காலங்களை கடந்து தற்போது 30 டன் 40 டன் செல்வதே சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி மாநகராட்சி கட்டிக்கொடுத்த கட்டிடத்திற்குள் வரி செலுத்தி வியாபாரம் செய்கின்ற தங்களை விட சாலையோர பூ வியாபாரிகளுக்கு அதிகமாக வியாபாரம் நடைபெறுகிறது என்றார். ஓணம் பண்டிகைக்கு குறிப்பிட்டு விற்பனை செய்யப்படும் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, உள்ளிட்ட பூக்கள் எல்லாம் அதிகமாகவே வந்துள்ளது என கூறிய அவர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் எல்லாம் வெறும் 20 ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இனி ஓணம் பண்டிக்கைக்கு ஒரு வார காலமே இருக்கின்ற நிலையில் வியாபாரம் என்ன ஆகுமோ தெரியவில்லை என வேதனை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...