மலுமிச்சம்பட்டி அருகே பெண் கவுன்சிலர் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் - பரபரப்பு!

மலுமிச்சம்பட்டி பெண் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோரை வீடு புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சராமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கவுன்சிலர் சித்ரா வாங்கிய நிலத்திற்கு புரோக்கர் கமிஷன் தராததால் வெட்டியதாக தெரியவந்துள்ளது.


கோவை: மலுமிச்சம்பட்டி அருகே பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

மலுமிச்சம்பட்டி அடுத்த அவை நகரை சேர்ந்தவர் சித்ரா (44), இவர் 3 வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு வீட்டில் இருந்த போது, திடீரென முகக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.



இதையடுத்து படுகாயங்களுடன் இருந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சித்ரா 3.5 செண்ட் நிலம் வாங்கியதாகவும், ஆனால் அதற்காக புரோக்கருக்கு பணம் கொடுக்காமல் சித்ரா காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரை ராஜா (24) என்பவர் மேலும் 4 பேருடன் சேர்ந்து சித்ராவின் வீட்டிற்கு வந்த பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதோடு, அவர்களை அரிவாளால் வெட்டி விட்டுச் சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்து அரிவாள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிச்சென்ற ராஜா உள்ளிட்ட 5 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...