பல்லடத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் கைகோர்த்த எம்.எல்.ஏ. ஆனந்தன்!

பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் - கொச்சின் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டார். போராட்டத்தின் போது டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்களை பெண்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் - கொச்சின் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. இக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும்.

மேலும் இந்த டாஸ்மாக் கடைக்கு பார் வசதி இல்லாததால் சாலையிலேயே மது வாங்கும் குடிமகன்கள் குடித்துவிட்டு நிலை தடுமாறி போதையில் விழுந்து கிடப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இக்கடை பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் நடமாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இதனிடையே மதுக்கடையை அகற்றகோரி பொதுமக்கள் கருப்புகொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.



சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை வரவேற்றார்.



தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி என்.வி.ராமசாமி மற்றும் பிஜேபி, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனிடையே போராட்டத்தின் போது டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக வந்த குடிமகன்களை கண்டு ஆவேசமடைந்த பெண்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...